/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடை பூட்டை உடைத்து சரக்கு வேன் திருட்டு
/
கடை பூட்டை உடைத்து சரக்கு வேன் திருட்டு
ADDED : டிச 13, 2024 01:45 AM
கடை பூட்டை உடைத்துசரக்கு வேன் திருட்டு
சேலம், டிச. 13-
சேலம், 5 ரோட்டை சேர்ந்த அய்யனார் மகன் மனோஜ், 24. இவர், மாசிநாயக்கன்பட்டியில் கருங்கல் வியாபாரம் செய்கிறார். கடந்த, 10ல் வியாபாரம் முடித்துவிட்டு, இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார். மறுநாள் காலை சென்றபோது கடை பூட்டு உடைக்கப்பட்டு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மினி சரக்கு வேன், 30,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. மனோஜ் புகார்படி, அம்மாபேட்டை போலீசார், சம்பவ இடத்தில் இருந்த, கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள், கடை பூட்டை உடைத்து பணம், சரக்கு வாகனத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. இதனால் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

