/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவி கர்ப்பம் டிரைவர் மீது 'போக்சோ'
/
பள்ளி மாணவி கர்ப்பம் டிரைவர் மீது 'போக்சோ'
ADDED : நவ 27, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துாரை சேர்ந்த, 16 வயது சிறுமி, பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கு அம்மம்பாளையத்தை சேர்ந்த, டிரைவர் செல்வத்துடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூலை, 27ல், வீட்டில் தனியே இருந்த மாணவியை, செல்வம் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
பின் மாணவியை மிரட்டி பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்ததால், பெற்றோர் கண்டித்தனர். மனமுடைந்த மாணவி, விஷம் குடித்தார். அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, 4 மாத கர்ப்பம் என தெரிந்தது. பின் ஆத்துார் மகளிர் போலீசார், செல்வம் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து அவரை தேடுகின்றனர்.

