/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாசிப்படிந்த தண்ணீரில் நடக்கும் பள்ளி மாணவர்கள் 3 மாதமாகியும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்

ADDED : நவ 27, 2025 02:38 AM
இடைப்பாடி, அரசு பள்ளி கட்டடத்தை சுற்றி, பாசிப்படிந்த தண்ணீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசும் நிலையில், 3 மாதங்களாக தினமும் அதிலேயே மாணவ, மாணவியர் நடந்து செல்லும் அவலம் தொடர்ந்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இது மாணவர்களின் உடல்நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.ஃஃ
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கச்சுப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல், 10ம் வகுப்பு வரை, 74 மாணவர், 58 மாணவியர் என, 132 பேர் படிக்கின்றனர். ஆனால் அப்பள்ளி கட்டடத்தை சுற்றி, 3 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கட்டடத்தை சுற்றி குழியாக இருப்பதால், சுற்றுப்பகுதிகளில் பெய்த மழைநீரும், கச்சுப்பள்ளியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசும் இடமாக மாறியுள்ளது.
இதனால் மாணவ, மாணவியர் பெரும் அவதிக்கு ஆளாகி, பாடம் படிக்க வேண்டிய அவலம் உள்ளது. மேலும் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
முக்கியமாக, மாணவ, மாணவியர், பள்ளிக்கு வரும்போதும், திரும்பி வீட்டுக்கு செல்லும்போதும், துர்நாற்றம் வீசும் தண்ணீரிலேயே நடந்து செல்லும் அவலம் தொடர்கிறது. அதில் விஷ ஜந்துகள் உலாவினால், மாணவர்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, உடனே தண்ணீரை வெளியேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.