/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதிகளுக்கு மொபைல் கொடுத்தசேலம் சிறை வார்டன் 'டிஸ்மிஸ்'
/
கைதிகளுக்கு மொபைல் கொடுத்தசேலம் சிறை வார்டன் 'டிஸ்மிஸ்'
கைதிகளுக்கு மொபைல் கொடுத்தசேலம் சிறை வார்டன் 'டிஸ்மிஸ்'
கைதிகளுக்கு மொபைல் கொடுத்தசேலம் சிறை வார்டன் 'டிஸ்மிஸ்'
ADDED : மே 02, 2025 01:08 AM
சேலம்சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றியவர் சண்முககுமார், 35. இவர்தண்டனை கைதியிடம் பணம் பெற்று, மொபைல் போன், கஞ்சா வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளித்த பின், கடந்த பிப்ரவரியில், சண்முககுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று, சண்முக குமாரை பணி நீக்கம் செய்து, சிறை எஸ்.பி. வினோத் உத்தரவிட்டார்.
இதுகுறித்து எஸ்.பி., வினோத் கூறியதாவது:
வார்டன் சண்முககுமார், 10 கைதிகளுக்கு மொபைல் போன் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு அவரது வங்கி கணக்கில், 2 லட்சம் ரூபாய் வரை பெற்றது தெரிந்தது. இந்த விவகாரத்தில் சிறை ஜெயிலர் ராஜேந்திரன் அளித்த அறிக்கைப்படி, சண்முககுமார், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.