/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடுத்தடுத்து 3 ஜவுளி கடைகளில் ரூ.1.98 லட்சம், துணிகள் திருட்டு
/
அடுத்தடுத்து 3 ஜவுளி கடைகளில் ரூ.1.98 லட்சம், துணிகள் திருட்டு
அடுத்தடுத்து 3 ஜவுளி கடைகளில் ரூ.1.98 லட்சம், துணிகள் திருட்டு
அடுத்தடுத்து 3 ஜவுளி கடைகளில் ரூ.1.98 லட்சம், துணிகள் திருட்டு
ADDED : ஜூலை 30, 2025 01:51 AM
சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள பிரபல ஜவுளி கடையை, கடந்த, 26 இரவு, ஊழியர்கள் பூட்டிச்சென்றனர். மறுநாள் காலை வந்தபோது, பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று அடுத்தடுத்து உள்ள, மேலும் இரு ஜவுளி கடைகளிலும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, 3 கடைகளிலும், 1.98 லட்சம், பல்வேறு துணிகள் திருடுபோனது தெரிந்தது.
இதுகுறித்து, 3 கடைகளின் மேலாளரான கார்த்திக் போஜன் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.