/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

ADDED : ஏப் 23, 2024 04:23 AM
சேலம்: சேலம், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், 23ம் ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், 10 நாட்கள் நடக்கும் பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம், விஷ்வக்சேனர் பூஜையுடன் துவங்கியது, நேற்று காலை கொடியேற்றத்தையொட்டி, கொடி மரத்துக்கு அபிேஷகம் செய்து, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து 'கருட கொடி'யை பட்டாாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர் திருச்சீவிகையில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை சிம்ம வாகனத்தில் வரதராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (ஏப்.,23) காலை 'ஹம்ச வாகனம்', மாலை 'சூரிய பிரபை', நாளை தங்க கருட வாகனம், மாலை அனுமந்த வாகனத்தில் காட்சி அளிப்பார்.
மே,1ல் வெட்டிவேர் சப்பரம், மே, 4ல் புஷ்ப பல்லக்கு, மே, 5ல் ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் மற்றும் கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.