/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புத்துமாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா
/
புத்துமாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா
ADDED : ஏப் 21, 2024 02:25 AM
ஆத்துார்:ஆத்துார்
அருகே மஞ்சினி புத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த,
16ல் கணபதி ேஹாமம், சக்தி அழைத்தலுடன் தொடங்கியது.
நேற்று
மூலவருக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் மீது
பூக்கள் கொட்டி வழிபட்டனர். வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் மூலவர்
அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். வரும், 23ல்
தேவராட்டம், மகளிர் கும்மியாட்டம், அலங்கார பூஜை; 24 காலை, 8:00
மணிக்கு பூக்குண்டம் பூஜை, 9:00 மணிக்கு பொங்கல், மாவிளக்கு வழிபாடு,
மதியம், 3:00 மணிக்கு அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல்; மாலை, 5:00
மணிக்கு பூ மிதி திருவிழா; 25ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது.

