/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லிக்கற்கள் கொட்டி 1 மாதமாகியும் நடவடிக்கை இல்லாததால் மக்கள் அவதி

ADDED : நவ 30, 2024 02:35 AM
வீரபாண்டி: வீரபாண்டி அருகே பாலம்பட்டியில் இருந்து நல்ராயன்பட்டி, காக்காயன் தெரு வழியே சீரகாபாடி செல்லும் சாலை, இனாம் பைரோஜி ஊராட்சிக்கு உட்பட்டது. அச்சாலை சீரழிந்து, போக்கு-வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இரு மாதங்களுக்கு முன், தமிழக முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தில், 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனால், மேடு, பள்ளங்களை மண் கொட்டி சமன்படுத்தி ஜல்லிக்கற்கள் கொட்டினர். ஆனால் ஒரு மாதத்-துக்கும் மேலாகியும் இதுவரை தார் போட நடவடிக்கை இல்லை. இதனால் அந்த வழியே சென்று வரும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.குறிப்பாக கற்களின் கூரான பகுதி, வாகன டயர்களை பதம் பார்த்து விடுவதால், பஞ்சராகி, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து வீரபாண்டி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஜல்லிக்கற்கள் மண் சாலையில் நன்கு படிவதற்காக விட்டு வைக்-கப்பட்டுள்ளது. கடந்த வாரமே தார் போடும் பணி நடக்கவிருந்-தது. இடையில், கனமழை பெய்யும் என வானிலை மையம் அறி-வித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த வாரம் சாலை போடப்-பட்டுவிடும்'
என்றனர்.