/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வழியாக திருப்பதிக்கு புதிய ரயில் மார்ச் 15 முதல் வாரம் இருமுறை இயக்கம்

ADDED : மார் 12, 2024 03:54 AM
சேலம்: சேலம் வழியே திருப்பதிக்கு, வாரம் இருமுறை இயக்கப்படும் புதிய ரயில் சேவை மார்ச், 15 முதல் தொடங்குகிறது.
திருப்பதி-கொல்லம் வாரம் இருமுறை ரயில், சேலம் வழியே இயக்க, ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. இதன்படி திருப்பதி-கொல்லம் வாரம் இருமுறை ரயில், மார்ச் 15 முதல், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மதியம், 2:40 மணிக்கு கிளம்பி சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியே அடுத்தநாள் காலை 6:20 மணிக்கு கொல்லம் சென்றடையும். சேலத்துக்கு அன்று இரவு, 7:22 மணிக்கும், ஈரோடுக்கு 8:20 மணிக்கும் வந்து செல்லும்.
கொல்லம்-திருப்பதி வாரம் இருமுறை ரயில், மார்ச் 16 முதல், சனி, புதன்கிழமைகளில், காலை 10:45 மணிக்கு கிளம்பி, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே அடுத்தநாள் அதிகாலை, 3:20 மணிக்கு திருப்பதி சென்றடையும். ஈரோடுக்கு இரவு 8:32 மணிக்கும், சேலம் ஜங்சனுக்கு இரவு 9:27 மணிக்கும் வந்து செல்லும்.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.