/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை, ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை
/
சாலை, ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : நவ 26, 2025 02:15 AM
ஆத்துார், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், தொகுதி மேம்பாட்டு நிதியில், கான்கிரீட் சாலை, ரேஷன் கடை உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்தது.
அதன்படி வைத்தியகவுண்டன்புதுாரில், 5 லட்சம் ரூபாயில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.
அதேபோல் வடுகத்தம்பட்டியில், 5 லட்சம் ரூபாய்; பெரியகிருஷ்ணாபுரத்தில், 10 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை; சின்னகிருஷ்ணாபுரத்தில், 10 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை; மேட்டுடையார்பாளையத்தில், 9 லட்சம் ரூபாயில் கான்கிரீட் உலர்களம் அமைத்தல் உள்பட, 39 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகளை தொடங்கிவைத்தார்.

