/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூக்கனேரியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை
/
மூக்கனேரியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை
மூக்கனேரியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை
மூக்கனேரியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை
ADDED : அக் 17, 2024 01:20 AM
மூக்கனேரியை மக்கள் பயன்பாட்டுக்கு
கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை
சேலம், அக். 17-
''மூக்கனேரி, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியை, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின் அவர் கூறியதாவது: மூக்கனேரி, 2,104.65 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதன் சுற்றளவு, 4,755 மீட்டர். இந்த ஏரி நிரம்பி, வெளியேறும் உபரிநீர், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில், நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களின் மண், குடிநீர், நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுத்து, மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பாசன தேவையை பூர்த்தி செய்வதோடு, மகசூல் அதிகரிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, மூக்கனேரியில் அமைக்கப்பட்டு வரும் படகு சவாரி மேடை, மீன்பிடி பகுதி, நுழைவு வாயில், சுகாதார வளாகங்கள் உள்பட ஏரியை அழகுப்படுத்தும் பணியை பார்வையிட்டேன். மேலும் தடுப்பணைகளின் உறுதி தன்மையை மேம்படுத்துதல், ஏரிச்சுவற்றை வலுப்படுத்த கல் பதித்தல், நடைபயிற்சி பாதை, பாதுகாப்பு வேலி அமைத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமய மூர்த்தி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

