/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆம்னி பஸ்சில் 9 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
/
ஆம்னி பஸ்சில் 9 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
ADDED : நவ 27, 2025 02:26 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை நடத்தினர். பெங்களூருவிலிருந்து கோவைக்கு சென்ற, 'சன்லைன்' என்ற தனியார் சொகுசு ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம், தெ.பண்ணைப்பட்டி அருகே சந்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த தர்மராஜ், 26, என்பவர், 90,000 ரூபாய் மதிப்புள்ள, 9 கிலோ கஞ்சாவை கடத்தி செல்வது தெரிந்தது.
நேரடியாக திண்டுக்கல் செல்லும் பஸ்சில் சென்றால், போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து, கோவை செல்லும் ஆம்னி பஸ்சில் ஏறி, அவினாசியில் இறங்கி திண்டுக்கல் செல்ல, தர்மராஜ் திட்டமிட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

