/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சத்துணவு சமையல் கூடத்தில் மின்சாரம் இல்லாததால் அவதி
/
சத்துணவு சமையல் கூடத்தில் மின்சாரம் இல்லாததால் அவதி
சத்துணவு சமையல் கூடத்தில் மின்சாரம் இல்லாததால் அவதி
சத்துணவு சமையல் கூடத்தில் மின்சாரம் இல்லாததால் அவதி
ADDED : ஜூலை 25, 2025 01:43 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, பள்ளிதெருப்பட்டி ஊராட்சி மாக்கனுாரில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு புதிதாக கட்டிய சத்துணவு சமையற்கூடம், ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்டது. அங்கு மின்சாதன உபகரணங்கள் பொருத்தி, கம்பத்தில் இருந்து இணைப்பு கொடுக்க சர்வீஸ் ஒயர் தயாராக வைக்கப்பட்டது.
ஆனால் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் சமையற்கூடம் தொடர்ந்து இருளில் உள்ளது. சமையல் செய்வதற்கு, மிக்சி கூட பயன்படுத்த முடியவில்லை. சமைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மின் இணைப்பு வழங்க, உடனே நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.