/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளக்குறிச்சி தி.மு.க., - எம்.பி.,யை காணவில்லை அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் பேச்சு
/
கள்ளக்குறிச்சி தி.மு.க., - எம்.பி.,யை காணவில்லை அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் பேச்சு
கள்ளக்குறிச்சி தி.மு.க., - எம்.பி.,யை காணவில்லை அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் பேச்சு
கள்ளக்குறிச்சி தி.மு.க., - எம்.பி.,யை காணவில்லை அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் பேச்சு
ADDED : மார் 31, 2024 04:09 AM
அயோத்தியாப்பட்டணம்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, நேற்று ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், மாசிநாயக்கன்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பெரிய கவுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
முத்தம்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, முதல்வராக இருந்தபோது, இ.பி.எஸ்., மத்திய அரசிடம் வலியுறுத்தி நிதி ஒதுக்கீடு பெற்றார். ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு பின், இத்திட்டத்தை தி.மு.க., - எம்.பி., செயல்படுத்தவில்லை. மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி தி.மு.க., - எம்.பி.,
கவுதமசிகாமணியை காணவில்லை என, மக்கள் தேடி வரும் நிலை உள்ளது. மீண்டும் தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்தால் அதே நிலை தான் தொடரும். மக்களின் திட்டங்களை நிறுத்திவிட்ட, தி.மு.க.,வை மக்கள் புறக்கணிக்க தயாராகிவிட்டனர். அ.தி.மு.க., வெற்றி பெற்றால் தான், காவிரி நீர் உள்பட அனைத்து தமிழக உரிமைகள், திட்டப்பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசுகையில், ''என் மகளை சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியில் கொடுத்துள்ளேன். இந்த மாவட்டத்தின் உறவினராக இருக்கிறேன். எனக்கு தாய் வீடு போன்று சேலம் மாவட்டம் உள்ளது. இத்தொகுதியில் உள்ள சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னேற்றத்துக்கு பணிபுரிவேன்,'' என்றார்.
இதில் ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, தே.மு.தி.க.,வின் மாவட்ட செயலர் இளங்கோவன், அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலர் ராஜா, ஜெ., பேரவை மாவட்ட இணை செயலர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ஜெயகாந்தன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலர் தனபால், மாவட்ட பிரதிநிதி வேணுகோபால், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலர் ஹரி உள்பட பலர் பங்கேற்றனர்.

