/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணுக்கு தொல்லை ஜெ., பேரவை நிர்வாகி கைது
/
பெண்ணுக்கு தொல்லை ஜெ., பேரவை நிர்வாகி கைது
ADDED : நவ 27, 2025 01:50 AM

ஆத்துார்: திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை இணை செயலர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் நரசிங்கபு ரம் நகராட்சி விநாயகபுரம், திருநாவுக்கரசு தெருவை சேர்ந்தவர் சங்கர், 37. அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலராக உள்ளார். உடையார்பாளையத்தை சேர்ந்த, 31 வயது பெண்ணுக்கு திருமணமாகி, இரண்டு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பெண், அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பணிபுரிகிறார்.
அவர் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சங்கர், பெண்ணை வழிமறித்து நிறுத்தி, 'மாதம், 10,000 ரூபாய் தருகிறேன். நீ என்னுடன் இருந்து கொள்' என கூறி, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து தப்பிய பெண், ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து பாலியல் தொல்லை உள்பட இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று சங்கரை கைது செய்தனர்.

