ADDED : நவ 02, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: நாக்பூரில், விஜயதசமி அன்று நடந்த தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவுக்கு புனித பயணம் சென்று திரும்பிய பவுத்தர்கள், 150 பேருக்கு, தலா, 5,000 ரூபாய் வரை, நேரடி மானியம் வழங்கப்படுகிறது.
அதற்கான விண்ணப்பத்தை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmz.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நவ., 30க்குள், உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005' என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம்.

