/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 13, 2024 07:27 AM
சேலம் : தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்கக்கோரி, அ.தி.மு.க.,வின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், சேலத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். 3
அதில், அமைப்பு செயலர் செம்மலை, 'தனியார் ஆடம்பர பார்களுக்கு அதிகளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது,'' என குற்றம்சாட்டினார். இதில் சேலம் தெற்கு எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்.அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து போதைப் பொருள் விற்பனையை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். நகர செயலர் மோகன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஓமலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அப்போது, தமிழக அரசை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர். ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ், ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், மணிமுத்து, நகர செயலர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேட்டூரில் ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன்; தாரமங்கலத்தில், சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன்; ஏற்காட்டில், எம்.எல்.ஏ., சித்ரா; மல்லுாரில், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து; கருப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல்; காடையாம்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன்; மேச்சேரியில் சேலம் மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலர் லலிதா; கொளத்துாரில், ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன்; ஆட்டையாம்பட்டியில், வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலர் வருதராஜ்; பனமரத்துப்பட்டியில், சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் தமிழ்மணி உள்பட மாவட்டம் முழுதும் மனித சங்கிலி போராட்டத்தில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டனர்.

