/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
படகு சவாரி, பூங்கா வருமானம் எவ்வளவு?
/
படகு சவாரி, பூங்கா வருமானம் எவ்வளவு?
ADDED : மே 23, 2024 07:23 AM
ஏற்காடு : ஏற்காட்டில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், அரசு தாவரவியல் பூங்கா 1, 2, மரபியல் பூங்காவை ரசிக்க நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி சிறியவருக்கு, 25, பெரியவருக்கு, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏரி பூங்கா கட்டணம் சிறுவருக்கு, 20; பெரியவருக்கு, 40 ரூபாய்.பூங்கா உள்ளிட்ட அனைத்தும் வழக்கம்போல் மாலை, 6:00 மணிக்கு மூடப்படும். கோடை விழா, மலர் கண்காட்சியையொட்டி அண்ணா பூங்கா மின்னொளியில் ஜொலிப்பதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணியர் இரவு, 8:30 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். அதனால் நேற்று, 4,379 பெரியவர்; 553 சிறியவர் கண்டுகளித்தனர். அதன்மூலம், 2,32,925 ரூபாய் வருவாய் கிடைத்தது.
அத்துடன் சேர்த்து ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா, மரபியல் பூங்காவுக்கு, 5,924 பெரியவர்கள், 789 சிறியவர்கள் என, 6,713 பேர் வந்தனர். அதனால், 3,15,430 ரூபாய் வருமானம் வந்தது. அதேபோல் படகு இல்லத்துக்கு, 1,962 பெரியர்கள் வந்ததால் நுழைவு கட்டணமாக, 19,620 ரூபாய், 388 சிறியவர் மூலம், 1,940 ரூபாய் கிடைத்தது. பெரியவர், சிறியவர் என, 2,350 பேர் படகு சவாரி செய்தனர். இதன்மூலம், 1,56,320 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.நீட்டிக்க கோரிக்கைஅரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏற்காட்டை சுற்றிப்பார்க்க, 300 ரூபாய் 'பேக்கேஜ்' கட்டணத்தில் தனி பஸ் இயக்கப்படுகிறது. அதில், 36 பயணியருக்கு மட்டும் அனுமதி. அதன்படி நேற்று தொடங்கி, மலர் கண்காட்சி நிறைவு பெறும், 5 நாட்களும், பேக்கேஜ் பஸ் முன்பதிவு முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தவிர ஏற்காட்டுக்கு ரெகுலர் பஸ், 14, சிறப்பு பஸ்கள் 18 இயக்கப்பட்டன. பள்ளி, கல்லுாரி விடுமுறை என்பதால் ஊட்டியை போன்று ஏற்காடு கோடை விழாவை, மேலும், 3 நாட்களாவது நீட்டிக்க, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.25ல் நாய் கண்காட்சிஏற்காடு கோடை விழாவில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வரும், 25 காலை, 10:00 மணிக்கு செல்லப்பிராணிகள் கண்காட்சி நடக்கிறது. இதில் பூனைகள், அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் ெஷப்பர்டு, டாபர்மேன், லேபர்டார், பக், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்கள், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற, நாட்டின வகை நாய்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக போலீஸ் துறையை சேர்ந்த செல்லப்பிராணிகளின் கீழ் படிதல், சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் செல்லப்பிராணிகளுக்கு பரிசுகள் உண்டு. அதனால் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள், செல்லப்பிராணிகளை அழைத்து வந்து கண்காட்சியில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிது.

