/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் அரசு செயலர் ஆய்வு
/
மேட்டூர் அணையில் அரசு செயலர் ஆய்வு
ADDED : பிப் 09, 2024 12:13 PM
மேட்டூர்: திருவாரூர் மாவட்டத்தில், 4,715 ஏக்கர், நாகை மாவட்டத்தில், 18,059 ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிரை காப்பாற்ற, மேட்டூர் அணையில் இருந்து, கடந்த, ௩ம் தேதி மாலை முதல், 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா, மேட்டூர் அணை பகுதியில் நேற்று ஆய்வு செய்தார். ஐந்து கண் மதகு, 16 கண் மதகு பகுதிகளை பார்வையிட்டார்.பின் அவர் கூறுகையில், ''மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று (பிப்., 9) மாலை, திருவாரூர், நாகை மாவட்டங்களை அடையும். பாசன பகுதிக்கு நீர் திறப்பை அதிகரிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, சப் - கலெக்டர் பொன்மணி, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்ரமணியன், அணை செயற்பொறியாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

