/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாட்டுப்புற கலை பயிற்சி 10 முதல் மாணவர் சேர்க்கை
/
நாட்டுப்புற கலை பயிற்சி 10 முதல் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 06, 2025 01:55 AM
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில், நாட்டுப்புற கலைகள் பகுதி நேர பயிற்சி மையம் செயல்படுகிறது. அங்கு, மாணவர் சேர்க்கை, வரும், 10 முதல் தொடங்க உள்ளது.
தப்பாட்டம், சிலம்பாட்டம், கோல்கால் ஆட்டம், நாடகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை பிரிவுகளில், சான்றிதழுடன் கூடிய ஓராண்டு பயிற்சி வகுப்பு, வெள்ளி, சனிதோறும், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை நடக்கும். 17 வயதுக்கு மேற்பட்டு, 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 - 2906197, 99526 65007 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

