/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீன்வள உதவியாளர் பணி கலந்தாய்வு துவக்கம்
/
மீன்வள உதவியாளர் பணி கலந்தாய்வு துவக்கம்
ADDED : டிச 23, 2025 08:13 AM
மேட்டூர்: மீன்வள உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு, நேற்று மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவல-கத்தில் துவங்கியது.
மீன்வளத்துறை சார்பில் மீன்வள உதவியாளர்கள், 8 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதில், எஸ்.சி., பிரிவு, 37, பி.சி., 34, இதர வகுப்பினர், 32 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். நீச்சல், பரிசல் ஓட்டுதல், மீன்
வலைகளை பின்னுதல் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்காக, தர்மபுரி மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த அக்.,31க்குள், மாநிலம் முழுவதும் இருந்து, 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நேற்று காலை முதல் மீன்வள உதவியாளர்களுக்கான கலந்தாய்வு, மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்
துவங்கியது.
இதில், மீன்வளத்துறை தர்மபுரி மண்டல துணை இயக்குனர் ஜெனிபர், மேட்டூர் உதவி இயக்குனர் உமா கலை செல்வி, சார்-ஆய்வாளர்கள் சுப்ரமணியன், கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்-தாய்வு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (டிச.,24) வரை கலந்தாய்வு நடக்கும் என, மேட்டூர் மீன்வளத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.

