/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பைனான்ஸ்' மோசடி வழக்கு: 20ல் முதலீடு பணத்தை வரவு வைக்க நடவடிக்கை
/
'பைனான்ஸ்' மோசடி வழக்கு: 20ல் முதலீடு பணத்தை வரவு வைக்க நடவடிக்கை
'பைனான்ஸ்' மோசடி வழக்கு: 20ல் முதலீடு பணத்தை வரவு வைக்க நடவடிக்கை
'பைனான்ஸ்' மோசடி வழக்கு: 20ல் முதலீடு பணத்தை வரவு வைக்க நடவடிக்கை
ADDED : நவ 16, 2024 03:37 AM
சேலம்: ராசிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன், 63. அதே பகுதியில், 'பாவை-யம்மாள் பைனான்ஸ்' தொடங்கி, 2015 முதல், முதலீடு வசூ-லித்தார். ஆனால் முதலீடு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தார். இதுகுறித்த புகார்படி, சேலம் பொருளாதார குற்றப்பி-ரிவு போலீசார், 2012ல் வழக்குப்பதிந்து, முருகேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, கோவை, 'டான்பிட்' நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் முருகேசனுக்கு, 10 ஆண்டு சிறை தண்-டனை, 1.96 கோடி ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரவி, 2022ல் தீர்ப்பு அளித்தார். இதனால் முதலீடு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறி, அவரது தரப்பில் சென்னை உயர்நீதி-மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், நீதிமன்ற வழிகாட்டுதல்படி, முதலீட்டா-ளர்களுக்கு சேர வேண்டிய, 4.65 கோடி ரூபாயை, சேலம் டி.ஆர்.ஓ., நீதிமன்றத்தில், 3 தவணையாக செலுத்தினார்.
தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்-களிடம் நேற்று, டி.ஆர்.ஓ., மேனகா விசாரித்தார். அதில் பங்-கேற்ற, 29 பேரிடம் தனித்தனியே விசாரித்து, அவை வாக்குமூல-மாக பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக டிபாசிட் ரசீது, செலுத்திய தொகை, ஆண்டு விபரம், உண்மைத்தன்மை உள்ளிட்டவை துல்லியமாக கேட்டறியப்பட்-டது. பின் முதலீடு தொகை, அவரவர் வங்கி கணக்கில் வரும், 20ல் வரவு வைக்கப்படும் என, டி.ஆர்.ஓ., தெரிவித்தார்.

