/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 15, 2025 01:00 AM
வீரபாண்டி, பயிர் காப்பீடு திட்டத்தில் சேர, வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகாயினி விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை;
வீரபாண்டி வட்டாரத்தில், சோளம் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஒரு ஏக்கருக்கு, 200 ரூபாய், நிலக்கடலைக்கு பிரீமிய தொகையாக, 435 ரூபாய் என, ஆக., 16 வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் ராகி பயிருக்கு பிரீமிய தொகையாக ஒரு ஏக்கருக்கு, 230 ரூபாய் செலுத்தி ஆக., 30 வரை பயிர் காப்பீடு செய்யலாம்.
எனவே விவசாயிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகக்துடன் உரிய பிரீமிய தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் செலுத்தி, பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.