/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவமனையில் 'போதை' வாலிபர் ரகளை
/
மருத்துவமனையில் 'போதை' வாலிபர் ரகளை
ADDED : நவ 09, 2025 04:59 AM
சங்ககிரி:சங்ககிரி
மேக்காட்டை சேர்ந்தவர் சங்கர்கணபதி, 25. அதே பகுதியில் உள்ள,
'மைக்செட்' கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00
மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆட்டையாம்பட்டி,
மாதேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சத்யராஜ், 27, என்பவர், சங்ககிரி
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் உள்ள பாஸ்ட் புட் கடையில், 'போதை'யில்
தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து சங்கர் கணபதி கேட்டார்.
ஆத்திரமடைந்த சத்யராஜ், சங்கர்கணபதி கன்னத்தில் அடித்து, பேனா
கத்தியால் குத்தியுள்ளார். சங்கர் கணபதிக்கு வயிறு, தொடையில் காயம்
ஏற்பட்டது.
சத்யராஜ், போலீஸ் ஸ்டேஷன் முன் தகராறில்
ஈடுபட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவர் தகராறில் ஈடுபட்டு, படுக்கை,
கம்பிகளில், தலையால் இடித்து ரகளையில் ஈடுபட்டார்.
மருத்துவமனை
உபகரணங்களை உடைக்க முயன்றார். போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டி,
'பெட்ரோல் குண்டு போடுவேன்' என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவரை,
சேலம் அரசு மருத்துவ
மனைக்கு, மருத்துவர்கள் அனுப்பினர். பின்
சங்கர்கணபதி புகார்படி, சங்ககிரி போலீசார், சத்யராஜ் மீது
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

