/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று விரைவு அஞ்சலில் பெறலாம்
/
ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று விரைவு அஞ்சலில் பெறலாம்
ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று விரைவு அஞ்சலில் பெறலாம்
ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று விரைவு அஞ்சலில் பெறலாம்
ADDED : மார் 20, 2024 02:17 AM
சேலம்,:வட்டார
போக்குவரத்து அலுவலங்களில் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமம், வாகன
பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள், தற்போது அஞ்சல் துறையின் விரைவு
அஞ்சல் சேவையில் அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பக்கூடிய விரைவு
அஞ்சல் தபால்களை, விண்ணப்பதாரர், அவரது வீட்டில் இருந்தபடி
தபால்காரர் மூலம் பெறலாம்.
மேலும் விண்ணப்பதாரருக்கு சான்றிதழ்
உடனே தேவையெனில், அவரவர் பகுதிக்கு உட்பட்ட அஞ்சலகத்துக்கு சென்று,
அடையாள அட்டையை காட்டி பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியை ஓட்டுனர்
உரிமம், வாகன பதிவு சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்
பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தகவலை சேலம் மேற்கு கோட்ட அஞ்சல்
கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.