/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்களுக்கு நேரடியாக சென்றடையும் திட்டங்கள் தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
/
மக்களுக்கு நேரடியாக சென்றடையும் திட்டங்கள் தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
மக்களுக்கு நேரடியாக சென்றடையும் திட்டங்கள் தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
மக்களுக்கு நேரடியாக சென்றடையும் திட்டங்கள் தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் பேச்சு
ADDED : ஏப் 13, 2024 11:02 AM
கருமந்துறை: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசன் நேற்று, ஆத்துார், ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கல்வராயன்மலை, கருமந்துறை, மேல்நாடு, கீழ்நாடு மலை கிராமங்களில், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழகத்துக்கு வருகின்றனர். திராவிட மாடல் திட்டங்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பா.ஜ., ஆட்சியை அகற்றுவதற்கு தான், 'இண்டியா' கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் புது மாற்றம் நிகழும். தி.மு.க., - காங்., தேர்தல் அறிக்கைகளில், ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களுடன் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இத்தேர்தலில், தி.மு.க., வாக்குறுதி தான் மக்களிடம் பேசப்பட்டு வருகின்றன.
மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள், பயனாளிகளுக்கு நேரடியாக செல்கின்றன. தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு நேரடியாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மலைவாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து வருவதால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலர் சிவராமன், நிர்வாகிகள் மனோகரன், கருணாநிதி, வெங்கடேசன், காங்., வட்டார தலைவர் செல்வராஜ், மா.கம்யூ., நிர்வாகி பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

