/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆண் குழந்தையும் மர்மச்சாவுகாதல் தம்பதியர் அதிர்ச்சி
/
ஆண் குழந்தையும் மர்மச்சாவுகாதல் தம்பதியர் அதிர்ச்சி
ஆண் குழந்தையும் மர்மச்சாவுகாதல் தம்பதியர் அதிர்ச்சி
ஆண் குழந்தையும் மர்மச்சாவுகாதல் தம்பதியர் அதிர்ச்சி
ADDED : மே 02, 2025 02:38 AM
இடைப்பாடி:ஓராண்டுக்கு முன் பெண் குழந்தை இறந்த நிலையில், தற்போது ஆண் குழந்தையும் மர்மமான முறையில் இறந்ததால், காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர் அருகே அரசிராமணி, தைலாங்காட்டை சேர்ந்த கட்டட தொழிலாளி பூபதி, 26. இவர், 5 ஆண்டுக்கு முன், ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில், கோவில் கட்டும் வேலைக்கு சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த மேகலா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு பிரிவினர். இவர்களது மகன் கோபிட்சன், 4, மகள் சோபிக்சனா, 2. ஓராண்டுக்கு முன், சோபிக்சனா சேமியா சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி இறந்து போனார்.
இந்நிலையில் கோபிக்சன், நேற்று காலை பச்சைப்பயறு குழம்பு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, கடையில் வாங்கி வந்த பாக்கெட் பால் குடித்து, 'லேஸ்' சாப்பிட்டார். சிறிது நேரம் விளையாடி விட்டு, கட்டிலில் படுத்த குழந்தை, வெகு நேரமாகியும் எழவில்லை. பெற்றோர், குள்ளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின் இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் காதல் தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். பின் பூபதி புகார்படி, தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

