/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொது பார்வையாளரை சந்தித்து முறையிடலாம்
/
பொது பார்வையாளரை சந்தித்து முறையிடலாம்
ADDED : மார் 28, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் பாட்டீல், இன்று(நேற்று) வந்துள்ளார்.
அவரது மொபைல் எண்: 94889 - 39101, மின்னஞ்சல் முகவரி, 15salempc@ gmail.com.லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு தேர்தல் தொடர்பாக பொது பார்வையாளரை சந்திக்க விரும்புவோர், சேலம் சாரதா கல்லுாரி சாலையில் உள்ள கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண்: 3ல், அவரது முகாம் அலுவலகம் செயல்படுகிறது. அங்கு காலை, 10:00 முதல், 11:00 மணி வரை நேரில் சந்திக்கலாம்.

