/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரை டிக்கெட் வழங்காத புகார்; கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
/
அரை டிக்கெட் வழங்காத புகார்; கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
அரை டிக்கெட் வழங்காத புகார்; கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
அரை டிக்கெட் வழங்காத புகார்; கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
ADDED : டிச 11, 2024 07:16 AM
ஆத்துார் : ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தினமும், 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், நாமக்கல் போன்ற தடங்களில் இயக்கப்படும் சில தனியார் பஸ்களில், 5 முதல், 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு, அரை டிக்கெட் வழங்கப்படுவதில்லை. மாறாக முழு கட்டணம் வசூலிப்பதாக, ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர்(ஆர்.டி.ஓ.,) ரகுபதிக்கு புகார் சென்றது.
இதனால் அவர் நேற்று, தனியார் பஸ்களின் கண்டக்டர்களை வரவழைத்து, 'சிறுவர்களுக்கு அரை டிக்கெட் வழங்க வேண்டும். இதுகுறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார்.