/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பத்ரகாளி கோவில் மண்டப கட்டுமானப்பணி தொடக்கம்
/
பத்ரகாளி கோவில் மண்டப கட்டுமானப்பணி தொடக்கம்
ADDED : மார் 07, 2024 02:26 AM
மேச்சேரி, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், 2013 ஜனவரியில் கும்பாபிேஷகம் நடந்தது. ஆனால் குறுகிய இடத்தில் உள்ள நிலையில் சுற்றிலும் வணிகவளாகங்கள் உள்ளன. அதன் அருகே இடம் இல்லாததால், பக்தர்கள் கோரிக்கையால், ஆட்டு சந்தை நடக்கும் மேட்டுப்பட்டி செல்லும் சாலையோரம், விருந்து மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 11 ஏக்கரில், 3 ஏக்கர் நிலத்தில், அறநிலையத்துறை நிதி, 4.40 கோடி ரூபாய் செலவில் பத்ரகாளியம்மன் கோவில் விருந்து மண்டபம், வாகனம் நிறுத்துமிடம் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. சாலையின் மற்றொரு பகுதியில், கோவில் ஊழியர்கள் குடியிருப்பு, பயணியர் ஓய்வு விடுதி கட்டப்படுகிறது. பணிகள் அதிகபட்சம், ஓராண்டில் நிறைவைடையும்.
விருந்து மண்டபம், வாகனம் நிறுத்துமிடத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி, பசுபதீஸ்வரர் கோவில் பராமரிப்புக்கு வழங்கப்படும் என, பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

