/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 சரக்கு வேன்களில் பேட்டரிகள் திருட்டு
/
3 சரக்கு வேன்களில் பேட்டரிகள் திருட்டு
ADDED : ஜூலை 24, 2025 01:46 AM
கெங்கவல்லி, கெங்கவல்லியை சேர்ந்தவர் மகாலிங்கம், 45. 'அடார்னஸ்' தொழில் செய்கிறார். இவரது மினி சரக்கு வேனில், இறந்தவர்களின் உடலை வைக்கும் பெட்டியை கொண்டு செல்ல பயன்படுத்துகிறார். இந்த வாகனத்தை, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள காலி இடத்தில், நேற்று முன்தினம் இரவு நிறுத்தியுள்ளார். காலையில் வாகனத்தை எடுக்க முயன்றபோது, இயக்க முடியவில்லை. அப்போது வாகனத்தில் இருந்த பேட்டரி திருடு
போனது தெரிந்தது.
அதேபோல் கெங்கவல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் அரவிந்த், 27, என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வேனில் இருந்த பேட்டரி, ஆணையம் பட்டியில் இளையபெருமாள், 43, என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வேன் பேட்டரி திருடுபோனது தெரிந்தது. ஒரே நாளில், 3 வாகனங்களில் பேட்டரிகள் திருடு
போனது தெரிந்தது. மேலும், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, கார், பைக்குகளில் வந்த மூன்று பேர், இத்திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. வாகன உரிமையாளர்கள் புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

