/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
ADDED : மார் 08, 2024 02:59 AM
சேலம்:'லியோ' என்பது, இந்தியாவில் கல்லுாரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், அனைவருக்கும் தரமான கல்விக்கு அணுகுதலை எளிதாக்குவதிலும், கல்வியியல் சார்ந்த நிதி மேலாண்மை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்றவற்றில் செயல்படும் ஓர் அமைப்பு. இந்த அமைப்பு, சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்வை, மும்பையில் நடத்தியது. அதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பள்ளி, கல்லுாரி நிறுவனத்தினர், கல்வியாளர், ஆராய்ச்சியாளர், வல்லுனர்கள் பங்கேற்றனர்.
அதில் விநாயகா மிஷன்ஸ் சேலம், புதுச்சேரி, சென்னை பகுதிகளில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் கற்றல், கற்பித்தல் சார்ந்த நடவடிக்கைகளை ஆராய்ந்தும், மாணவர்களின் பல்வேறு துறை, இதர அடிப்படை திறன் மேம்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளை கருத்தில் கொண்டும், திறன் மேம்பாடு, கற்றல் சார்ந்த முயற்சியில் சிறந்து விளங்கும் கல்லுாரி என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விருதை, 'லியோ' நிறுவன இணை நிறுவனர் நவிஸ்ரெட்டி, துறையின் டீன் செந்தில்குமாரிடம் வழங்கினார். மேலும் இந்த உயர்வுக்கு அடித்தளமாக இருந்து பங்களித்து வரும் செந்தில்குமாருக்கு, 'சிறந்த தலைவர் விருது' வழங்கப்பட்டது.

