/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நியமன பதவி கவுன்சிலராக மா.திறனாளிகளுக்கு ஆணை
/
நியமன பதவி கவுன்சிலராக மா.திறனாளிகளுக்கு ஆணை
ADDED : நவ 26, 2025 02:07 AM
பாலக்கோடு, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்.,க்களில், மாற்றுத்திறனாளி ஒருவர் நியமன உறுப்பினராக தேர்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியின் நியமன கவுன்சிலராக, 17வது வார்டு அண்ணாநகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கவிதா, 40, நேற்று கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி, செயல் அலுவலர் இந்துமதி ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி இஸ்மாயில் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதற்கான நியமன ஆணையை, டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று வழங்கினார்.

