sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏர் ஷோ நிகழ்ச்சி: அமைச்சர் விளக்கம்

/

ஏர் ஷோ நிகழ்ச்சி: அமைச்சர் விளக்கம்

ஏர் ஷோ நிகழ்ச்சி: அமைச்சர் விளக்கம்

ஏர் ஷோ நிகழ்ச்சி: அமைச்சர் விளக்கம்


ADDED : அக் 07, 2024 03:05 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மெரினாவில் நடந்த ஏர் ஷோ குறித்து மக்கள் நல்வாழ்-வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை:விமானப்படை சாகச நிகழ்ச்சியை நடத்த, பலமுறை ஆலோச-னைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விமானப் படை அதிகா-ரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில்கொண்டு ஏற்பாடுகள் செய்-யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இரண்டு சுகாதார குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இதுமட்டுமின்றி இந்திய ராணுவம் சார்பாகவும் மருத்துவக்கு-ழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர அவசர மருத்துவ உத-விக்காக, 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்-தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்-பட்டு இருந்தன. ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்-ளிட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில், 100 படுக்-கைகளும், 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டி-ருந்தனர்.சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் வாயிலாக, மெரினா கடற்க-ரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்-பட்டிருந்தன. விமானப்படை நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே, அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் அரசால் செய்து தரப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us