/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்சி மாற்றத்துக்கு பின் பா.ஜ., முறைகேடு தெரியவரும்: செல்வபெருந்தகை பட்டியல்

ADDED : ஏப் 04, 2024 04:52 AM
ஈரோடு: ஈரோட்டில், தி.மு.க., வேட்பாளர் பிரகா ைஷ ஆதரித்து நேற்று பிரசார கூட்டம் நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ., இளங்கோவன், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:
காங்., தலைவராக சோனியா இருந்தபோது, 10 ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி நடந்தது. அப்போது தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தமிழ் செம்மொழியானது. முதல்வர் ஸ்டாலின் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை, 80 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றவிட்டார். அவற்றை எல்லாம் சொல்லித்தான் நாங்கள் ஓட்டு கேட்கிறோம். கடந்த, 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மோடி, தமிழகத்துக்கு என்ன திட்டம் கொண்டு வந்தார் என சொல்லட்டும்.
சி.ஏ.ஜி., அறிக்கையில், 7 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கிறது. தேர்தல் பத்திர முறைகேட்டை நாடு அறியும். இவை அனைத்தும் தேர்தல் முடிந்து, ஆட்சி மாற்றத்துக்குப்பின் வெளியே கொண்டு வரப்படும்.
இவ்வாறு பேசினார்.