/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கற்றல் அடைவு தேர்வு தரவரிசை நிலை பள்ளிகளில் 'நோட்டீஸ்' ஒட்ட அறிவுரை
/
கற்றல் அடைவு தேர்வு தரவரிசை நிலை பள்ளிகளில் 'நோட்டீஸ்' ஒட்ட அறிவுரை
கற்றல் அடைவு தேர்வு தரவரிசை நிலை பள்ளிகளில் 'நோட்டீஸ்' ஒட்ட அறிவுரை
கற்றல் அடைவு தேர்வு தரவரிசை நிலை பள்ளிகளில் 'நோட்டீஸ்' ஒட்ட அறிவுரை
ADDED : ஜூலை 13, 2025 01:21 AM
சேலம் தமிழகத்தில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 3, 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில், கடந்த பிப்ர வரியில் மாநில கற்றல் அடைவு தேர்வு நடத்தப்பட்டது. 25,320 பள்ளிகளில் நடந்த தேர்வு முடிவு கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர்கள் இணைந்து, நேற்று முன்தினம் வெளியிட்ட சுற்றறிக்கை:
ஒவ்வொரு பள்ளியும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் என, என்ன தரவரிசையில் உள்ளது என்பதும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை மக்கள், பெற்றோர், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் பார்வையிடும்படி, தலைமை ஆசிரியர் அறையில் ஒட்ட வேண்டும்.
மேலும் ஒவ்வொரு ஆசிரியர், தலைமை ஆசிரியர், பள்ளி, தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில், 3, 5, 8ம் வகுப்புகள், எந்த தர நிலையில் உள்ளது என்பதையும், ஒவ்வொரு மாணவரின் தர நிலையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தரநிலையில் பின்தங்கிய பள்ளி கள், முன்னேற்றம் அடைய செயல் திட்டங்கள் தீட்டி, அதன்படி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் அமைய வேண்டும். மாவட்டத்தில் சிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம்பெறும்படி, ஒவ்வொரு ஆசிரியரும், பள்ளியை முன்னேற்ற, முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

