/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுச்சாவடி மையங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு
/
ஓட்டுச்சாவடி மையங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு
ADDED : மார் 09, 2024 01:11 AM
ஆத்துார், லோக்சபா தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் உள்ள ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிகளின் ஓட்டுச்சாவடி மையங்களின் பாதுகாப்பு, குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், பழுதான நிலையில் உள்ள கட்டடங்கள் விபரம், அவற்றை சரிசெய்யும் பணிகள் போன்றவை குறித்து, அறிக்கையாக வழங்கும்படி சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஆத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றம் தொடக்கப் பள்ளிகளில், பெத்தநாயக்கன்பாளையம் பி.டி.ஓ., துரைசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், ஆத்துார் அருகே, கல்லாநத்தம் மற்றும் துலுக்கனுார் அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இவற்றை சீரமைப்பு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

