/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.70 லட்சம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி
/
ரூ.70 லட்சம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி
ADDED : பிப் 15, 2024 04:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமாக, சீலநாயக்கன்பட்டி, குறிஞ்சி நகரில், 630 சதுரடி காலி நிலம் உள்ளது.
அதன் மதிப்பு, 70 லட்சம் ரூபாய். அந்த இடத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி மேற்கொண்டதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த காலி நிலத்தை சுற்றி, முள்வேலி அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த, 11 நள்ளிரவு, 12:00 மணிக்கு, மர்ம நபர்கள் வேலியை அகற்றி ஆக்கிரமிக்க முயன்றனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி மண்டல செயற்பொறியாளர் செந்தில்குமார், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

