/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுருக்கமுறை திருத்த 3வது முகாம் பெயர் சேர்க்க 6,754 விண்ணப்பம்
/
சுருக்கமுறை திருத்த 3வது முகாம் பெயர் சேர்க்க 6,754 விண்ணப்பம்
சுருக்கமுறை திருத்த 3வது முகாம் பெயர் சேர்க்க 6,754 விண்ணப்பம்
சுருக்கமுறை திருத்த 3வது முகாம் பெயர் சேர்க்க 6,754 விண்ணப்பம்
ADDED : நவ 24, 2024 12:47 AM
சுருக்கமுறை திருத்த 3வது முகாம்
பெயர் சேர்க்க 6,754 விண்ணப்பம்
சேலம், நவ. 24-
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 6,754 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும், 2025 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைவோர், பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது.
கடந்த அக்., 29ல் தொடங்கிய பணி, வரும், 28 வரை நடக்கிறது. அதை செம்மைப்படுத்த, சிறப்பு, 3வது முகாம், 1,269 மையங்களில், 3,264 ஓட்டுச்சாவடிகளில் தனித்தனியே நேற்று நடந்தது. அதில் பெயர் சேர்க்க, 6,754 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் அதிகபட்சமாக ஆத்துார் தொகுதியில், 770, குறைந்தபட்சம் சங்ககிரியில், 408 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
நீக்க, 2,584, குடியிருப்பு மாற்றம், பட்டியலில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைக்கு, 5,845 பேர் என, மொத்தம், 15,183 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
தொகுதி வாரியாக பெறப்பட்ட மொத்த விண்ணப்ப விபரம்:
கெங்கவல்லி, 1,036; ஆத்துார், 1,462; ஏற்காடு, 1,335; ஓமலுார், 1,208; மேட்டூர், 1,193; இடைப்பாடி, 1,521; சங்ககிரி, 1,103; சேலம் மேற்கு, 1,422; வடக்கு, 1,708; தெற்கு, 1,338; வீரபாண்டி, 1,857 மனுக்கள் முறையே, 15,183 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இன்று நடக்கும், 4வது முகாமுடன் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நிறைவடைகிறது. 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

