/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனத்தில் 615 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
/
வனத்தில் 615 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
ADDED : ஜூலை 21, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், ஆத்துார் வன கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்ட கிராம பகுதிகளில் கிராம வனக்-குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர்,
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூழல் மேம்-பாட்டு குழுவினர், வனத்துறையினர் என, 500 பேர் இணைந்து நேற்று முன்தினம், பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஒரே நாளில், 615 கிலோ பிளாஸ்டிக் கழிவு அகற்றப்பட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.