/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டா எப்ப கிடைக்கும் 58 குடும்பத்தினர் தவிப்பு
/
பட்டா எப்ப கிடைக்கும் 58 குடும்பத்தினர் தவிப்பு
ADDED : ஜூலை 15, 2025 12:59 AM
சேலம், சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சந்திரபிள்ளை வலசு ஊராட்சி, நடுப்பட்டி மக்கள், ஒருசேர திரண்டு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதன்பின் அவர்கள் கூறியதாவது: நடுப்பட்டியில், 58 குடும்பத்தினர், வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். வீட்டுக்கு வரி செலுத்துவதால், மின்வசதி பெற்றுள்ளோம். அத்துடன் ரேஷன்கார்டு, ஆதார் போன்ற சட்டபூர்வ அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வீடுகளுக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். விசாரணையில், நத்தம் வகை நிலங்களை, புறம்போக்கு தரிசு நிலம் என்றும், கணினியில் நத்தம் நிலம் என பதிவேற்றம் செய்திருப்பதால், மேல் நடவடிக்கை இன்றி, கிடப்பில் உள்ளது.
இது தொடர்பாக, தாசில்தார், ஆர்.டிஒ., மற்றும் கிராமசபை, ஜமாபந்தியில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 58 குடும்பத்துக்கும் தனிபட்டா வழங்கி, நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

