/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று முதல் 15 வரை 200 சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்று முதல் 15 வரை 200 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 13, 2024 08:31 AM
சேலம்: அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாளை முன்னிட்டு இன்று முதல் வரும், 15 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்ம-புரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்-களூருக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னை; பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலுார்; சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரம்; ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ள, கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.

