sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

11 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

/

11 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

11 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

11 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்


ADDED : நவ 08, 2025 05:16 AM

Google News

ADDED : நவ 08, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் ரயில்வே தனிப்படை போலீசார், நேற்று காலை, சேலம் வந்த, ஷாலிமார் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனை செய்தனர். முன்பதிவற்ற பொதுப்பெட்டி கழிப்பறை அருகே, இரு பை கேட்பாரற்று கிடந்தன.

அதை போலீசார் திறந்து பார்த்தபோது, 9 கிலோ கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றி, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், ரயிலில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.

2 கிலோ

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் இரவு, 'டாடா நகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்' ரயில் வந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனையில், பொது பெட்டியில் கிடந்த ஒரு பையை எடுத்து சோதித்தனர். அதில், 2 கிலோ எடையில் கஞ்சா பொட்டலம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, யார் கடத்தி வந்தார்கள் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us