/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆதி விநாயகர் கோவிலில் 108 சங்காபிேஷகம்
/
ஆதி விநாயகர் கோவிலில் 108 சங்காபிேஷகம்
ADDED : டிச 17, 2024 07:20 AM
வீரபாண்டி: மார்கழி மாதப்பிறப்பையொ ட்டி, ஆதி விநாயகர் கோவிலில், 108 சங்காபிேஷகம் நடந்தது.
ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடியில் உள்ள, பழமையான ஆதி விநாயகர் கோவில் உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையாருக்கு, உலக நன்மை வேண்டி கார்த்திகை மாத சோம வாரங்களில், 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
வழக்கமாக ஐந்து திங்கள்கிழமை நடத்தப்படும் சங்காபிேஷகத்தின் நிறைவு நாளான நேற்று, மார்கழி மாதப்பிறப்பும் இணைந்து
வந்ததை தொடர்ந்து, உலக மக்கள் அனைவரும் நோய் பாதிப்பு ஏதுமின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டி, 108 சங்காபி ேஷகம்
நடந்தது. இதற்காக, 108 வலம்புரி சங்குகளில் புனிதநீரை நிரப்பி, வெள்ளை துணியில் நெல் மணிகளை பரப்பி, அதில் சங்குகளை
ஸ்வஸ்திக் வடிவில் மலர்களால் அலங்கரித்து வைத்து, 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு யாகம் செய்து, பூர்ணாஹூதியில்
பக்தர்கள் தங்கள் கைகளால் மூலிகைகளை யாகத்தில் சமர்ப்பித்தனர்.பூஜையில் வைத்த சங்குகளின் புனித நீரால், அண்ணாமலையாருக்கு அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் தீபாராதணை
காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மார்கழி
மாதப்பிறப்பையொட்டி, ஆட்டையாம்பட்டி வேலநத்தம் ஸ்ரீதேவி, பூதேவி லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், காலை 6:00
மணிக்கு நடந்த தனுர் மாத பூஜையில், திரளான பெண்கள் திருப்பாவை பாராயணம் செய்து பாவை நோன்பை துவக்கினர்.

