/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா கல்வி குழும தலைவர் சதாபிஷேக விழா
/
சோனா கல்வி குழும தலைவர் சதாபிஷேக விழா
ADDED : ஜூலை 29, 2024 01:09 AM
சேலம்: சேலம், சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா சதாபிஷேக விழா, சோனா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சோனா வள்ளியப்பா பள்ளி குழந்தைகளின் வரவேற்பு நடனம் நடந்தது. குழும துணைத்தலைவர் சொக்கு வரவேற்றார். வள்ளி-யப்பாவின் வாழ்க்கை பயணம் குறித்த குறும்படம் காட்சிப்படுத்-தப்பட்டது. பெங்களூரு, ஸ்ரீகைலாசா ஆசிரம மகா சமஸ்தான பீடாதிபதி ஜெயந்திர பூரி மகா சுவாமிஜியின் ஆன்மிக சொற்பொ-ழிவு நடந்தது.
'வேரும் விழுதுகளும்' தலைப்பில், வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை, நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு வெளியிட, சென்னை, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்த-லைவர் வேணு ஸ்ரீனிவாசன், பண்ணாரி தொழில்நுட்ப கல்லுாரி தாளாளர் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொண்டனர்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்-திரன், எம்.பி., செல்வகணபதி, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், ரத்னா குழும நிறுவனர் பழனியப்பன், காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் தலைவர் லேனா நாரா-யணன், ஸ்ரீபக்த வரப்பிரசாத ஆஞ்சநேய திருக்கோவில் அறங்கா-வலர் நாகராஜன், டெசோல்வ் செமி கண்டக்டர் நிறுவனத்த-லைவர் வீரப்பன் ஆகியோர் பாராட்டி பேசினர்.
வாழ்நாள் சாதனையாளர் விருது, கோகுலம் மருத்துவமனை தலைவர் அர்த்தனாரி, 'ஸ்வலெக்ட்' எனர்ஜி சிஸ்டம் நிறுவனத்த-லைவர் செல்லப்பன், லோட்டஸ் ஹோமின் நிறுவனர் செலினா அகஸ்டின் மேரிக்கு வழங்கப்பட்டன.
சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா, ஏற்புரை வழங்-கினார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி, பெரியார் பல்-கலை துணைவேந்தர் ஜெகநாதன் பங்கேற்றனர். மேலும் வள்ளி-யப்பா பள்ளி முதல்வர் கவிதா, சோனா மருத்துவ கல்லுாரி முதல்வர் நரேஷ்குமார், கலைக்கல்லுாரி முதல்வர் காதர்நவாஷ், தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோரும், வள்ளியப்பாவை வாழ்த்தினர். தியாகராஜா பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயனுக்கு, சிறந்த பொறியாளர் விருது வழங்-கப்பட்டது. சோனா கல்வி குழும துணைத்தலைவர் தியாகு நன்றி தெரிவித்தார்.

