/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுச்சாவடி தொடர்பாக ஆட்சேபனை 4க்குள் தெரிவிக்க ஆர்.டி.ஓ., அறிவுரை

ADDED : செப் 01, 2024 03:39 AM
ஆத்துார்: வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்-பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆத்துார்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி தலைமை வகித்து பேசியதாவது:வரைவு வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடிகள் தொடர்பாக ஆட்-சேபனை, ஆலோசனை இருந்தால், வரும், 4 மாலை, 5:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், குடியிருப்பு சங்கம், மக்கள் ஆட்சேபனைகள், தேர்தல் கமிஷன் விதிக்குட்பட்டு பரிசீலித்து இறுதி செய்து தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும்.
தற்போது, 100 சதவீதம் வீடுதோறும் சென்று வாக்காளர் பட்-டியல் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுக்க வரும்போது, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினர், தாசில்தார்கள் ஆத்துார் பாலாஜி, பெத்தநாயக்கன்பாளையம் ஜெயக்குமார், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.