/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தந்தையை தாக்கிய வீடியோ பரவல் மகனிடம் போலீசார் விசாரணை
/
தந்தையை தாக்கிய வீடியோ பரவல் மகனிடம் போலீசார் விசாரணை
தந்தையை தாக்கிய வீடியோ பரவல் மகனிடம் போலீசார் விசாரணை
தந்தையை தாக்கிய வீடியோ பரவல் மகனிடம் போலீசார் விசாரணை
ADDED : ஏப் 26, 2024 02:03 AM
ஆத்துார்,:பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளத்தை சேர்ந்தவர் குழந்தைவேல், 68. இவரது மனைவி ேஹமா, 65, மகன் சக்திவேல், 34, மகள் சங்கவி, 32. குழந்தைவேலுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாயில் சேகோ ஆலையும், பெரம்பலுாரில் அரிசி ஆலை, விவசாய தோட்டம் உள்ளன.
சக்திவேல், ஆத்துாரில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். இவர், 2022 மார்ச்சில் சேகோ ஆலை உள்ளிட்ட சொத்துகளை எழுதி வைக்கும்படி, குழந்தைவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து உள்ளார்.
இதனால் தகராறு செய்த சக்திவேல், பெரம்பலுார் சென்று, தந்தை வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். பிப்., 16ல், வீட்டில் இருந்த குழந்தைவேலை, சக்திவேல் சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை, காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மீண்டும் தாக்கினார். ஏப்., 18ல் குழந்தைவேல் இறந்தார்.
இந்நிலையில், பிப்., 16ல், தந்தையை, மகன் தாக்கிய வீடியோ, நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரித்ததில், பெரம்பலுார் பகுதியில் இச்சம்பவம் நடந்தது தெரிந்ததால், கைகளத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர்.
கைகளத்துார் போலீசார் நேற்று, 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஆத்துாரில் இருந்த சக்திவேலை, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''குழந்தைவேல், பெரம்பலுார் மாவட்டத்தில் வசித்த நிலையில் அங்கு அவரது மகன் சக்திவேல் சென்று, தந்தையை தாக்கியுள்ளார். இது வீட்டில் இருந்த கேமராவில் பதிவாகி தற்போது பரவி வருகிறது. இதுகுறித்து கைகளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்,'' என்றார்.

