/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்:சேலம் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
/
மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்:சேலம் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்:சேலம் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்:சேலம் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : ஏப் 08, 2024 02:29 AM
சேலம்:'இண்டியா'
கூட்டணியின், சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர்
செல்வகணபதி, இடைப்பாடி சட்டசபை தொகுதி முழுதும், உதயசூரியன்
சின்னத்துக்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். கொங்கணாபுரம்
ஒன்றியம், பேரூர் பகுதியில் உள்ள தங்காயூர், அம்மன்காட்டூர்,
கோணாங்குட்டையூர், வெள்ளக்கல்பட்டி காலனி, கொங்கணாபுரம்,
பாலப்பட்டி, எருமைப்பட்டி, கச்சுப்பள்ளி, வெள்ளாளபுரம்
பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
தங்காயூரில், திரண்டிருந்த வாக்காளர்கள் மத்தியில் செல்வகணபதி பேசியதாவது:
மத்திய
அரசுக்கு, தமிழகம் தான் அதிக வரி வருவாயை கொடுத்து வருகிறது. 6.90
லட்சம் கோடி ரூபாயை வரியாக கொடுத்துள்ள தமிழகத்துக்கு, அப்பணத்தை
கொண்டு பல்வேறு திட்டங்களை, மத்திய பா.ஜ., அரசு செய்திருக்க
வேண்டும். ஆனால் தமிழகத்துக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால் நாம்
விரும்பும் ஆட்சி, நமக்கு நல்லது செய்கிற ஆட்சி, மத்தியில் வர வேண்டும்.
அது, 'இண்டியா' கூட்டணி ஆட்சியாக அமைய வேண்டும்.
பிரதமர்,
நல்லவராக இல்லை. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 29 காசு தான் திரும்ப
வருகிறது. 71 காசு, பக்கத்து வீட்டுக்கு செல்கிறது. அதேபோல்
ஜி.எஸ்.டி., வரி பகிர்வில், 22,000 கோடி ரூபாயை தராமல் வைத்துள்ளார்.
இப்படி பாரபட்சமாக பிரதமர் இருந்தால், எப்படி தங்காயூரில் நல்ல
சாலை போட முடியும்? அடிப்படை வசதிகளை செய்து தர இயலும்? அதனால்தான்
தமிழகத்துக்கு எதுவும் செய்யாத, மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்.
காஸ்
சிலிண்டர் விலை, 1,200 ரூபாய், பெட்ரோல் லிட்டர், 104, டீசல், 94 ரூபாயாக
உயர்ந்து விட்டது. ஒரு சிப்பம் அரிசி, 2,000 ரூபாய். பவுன் விலை
ஜி.எஸ்.டி.,யோடு, 54,000 ரூபாய். இப்படி விலைவாசி உயர காரணமான, பா.ஜ.,
ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர், இ.பி.எஸ்., ஆகியோர் கள்ளக்கூட்டணி
வைத்துள்ளார்கள். அடிப்பது மாதிரி அடித்து அழுவார்கள். அதனால்
அவரையும் சேர்த்து வீழ்த்த வேண்டும்.முதல்வர் ஸ்டாலின்,
தாய்மார்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை தருகிறார்.
பஸ்சில் விலையில்லா பயணம், மாணவர்களுக்கு காலை உணவு. இப்படி எண்ணற்ற
திட்டங்களை தரும் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி, நாடு முழுமைக்குமானதாக
இருக்க வேண்டும். அதனால் எனக்கு உதயசூரியன் சின்னத்தில்
ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில்
மேற்கு மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், ஒன்றிய செயலர் பரமசிவம்,
பேரூர் செயலர் அர்த்தனாரீஸ்வரன், டவுன் பஞ்சாயத்து தலைவர் சுந்தரம்,
நிர்வாகிகள் சவுந்தரராஜன், திருநாவுக்கரசு, பிரபு கண்ணன்,
குமார், செல்வக்குமார், ராஜவேலு, பாண்டியன், பாலாஜி, பழனிசாமி,
அண்ணாதுரை, 'இண்டியா' கூட்டணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்,
தொண்டர்கள் உள்ளிட்ட பலரும், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.

