/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வேண்டும் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து மா.செ., பேச்சு
/
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வேண்டும் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து மா.செ., பேச்சு
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வேண்டும் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து மா.செ., பேச்சு
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வேண்டும் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து மா.செ., பேச்சு
ADDED : ஏப் 04, 2024 04:27 AM
அயோத்தியாப்பட்டணம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று, தி.மு.க., தேர்தல் பணிமனை அலுவலகத்தை, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் மலையரசனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு கட்சியினர் வீதி, வீதியாக செல்ல வேண்டும். இத்தொகுதியில், தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வேண்டும். இத்தேர்தலில், 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தீவிர தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.,வின், 10 ஆண்டு ஆட்சியில், தமிழகம் இருண்ட காலமாக இருந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின், அதிகளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, முன்மாதிரி மாநிலமாக உள்ளது.
'இண்டியா' கூட்டணி வலிமையாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, விவசாய கடன் தள்ளுபடி, சுய உதவிக்குழு மானிய கடன் மற்றும் தள்ளுபடி வழங்கியது, தி.மு.க., ஆட்சியில் தான். இத்தொகுதியில் அனைத்து வசதிகளும் பெறவேண்டும் எனில், தி.மு.க., வெற்றி பெற வேண்டும்.
'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றப்படும். வீடு தேடி வரும் மருத்துவ திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு போன்ற திட்டங்கள் தொடர வேண்டும் எனில் தி.மு.க., வெற்றி பெறவேண்டும். வேட்பாளர் மலையரசன் வெற்றி பெற்ற பின், இத்தொகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆதாரத்துடன் பேசும் பேச்சை கண்டு, பிரதமர் துாக்கமின்றி பேசி வருகிறார். வேட்பாளருக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருவதால், தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், தி.மு.க., ஒன்றிய செயலர் விஜயகுமார், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் வைத்திலிங்கம், மா.கம்யூ., மாவட்ட செயலர் சண்முகராஜா, வி.சி., மாவட்ட செயலர் தெய்வானை, தி.மு.க., மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பேரூர் செயலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

