/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தென்னை பண்ணையில் 38,000 கன்றுகள் தயார்
/
தென்னை பண்ணையில் 38,000 கன்றுகள் தயார்
ADDED : மே 27, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடையாம்பட்டி : காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை விதைப்பண்ணை வளாகத்தில் அரசு தென்னை பண்ணை உள்ளது.
அங்கு நெட்டை, நெட்டை குட்டை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. கடந்த வாரத்தில் பெய்த மழையால், ஓமலுார், காடையாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் உழவு பணியை தொடங்கினர்.
இந்நிலையில் தென்னை பண்ணையில் நெட்டை ரகம், 22,000, நெட்டை குட்டை ரகம், 16,000 என, 38,000 கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. நெட்டை ரகம், 60 ரூபாய், நெட்டை குட்டை ரகம், 125 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என, தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

